undefined

“திமுகவை வீட்டிற்கு அனுப்புவோம்... ” - இன்றைய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கையில் எடுக்கும் புதிய அஸ்திரம்!

 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பலத்தைக் காட்டும் விதமாக இந்தத் தேர்தல் பொதுக்கூட்டம் அமைகிறது.

கேரளாவில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி, இன்று மதியம் 1:15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து மதியம் 2:15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்கிறார். மாலை 3:10 மணிக்கு மேடையில் உரையாற்றும் பிரதமர், சுமார் ஒரு மணிநேரம் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். மாலை 4:15 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பின்வரும் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக & பாஜக, பாமக (அன்புமணி தரப்பு), அமமுக (டி.டி.வி. தினகரன் தரப்பு), தமிழ் மாநில காங்கிரஸ் (ஜி.கே. வாசன் தரப்பு) இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம். ஆகிய கட்சிகளின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் இன்றைய பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்கின்றனர்.

பிரதமரின் வருகையையொட்டி செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் பகுதிகளில் சுமார் 10,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றி 5 கி.மீ சுற்றளவிற்குப் 'ட்ரோன்கள்' பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைத்திலிங்கம் போன்ற முக்கியத் தலைவர்கள் திமுகவிற்கு மாறிய பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மற்றும் பாஜக கூட்டணி சந்திக்கும் முதல் மிகப்பெரிய பொதுக்கூட்டம் இதுவாகும். பிரதமரின் வருகையையொட்டி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (GST Road) மதுராந்தகம் அருகே மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை கனரக வாகனங்கள் செல்லக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!