undefined

இன்று மாலை விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் சொல்லுங்க... எல்.முருகன் வேண்டுகோள்!

 

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்தத் தீர்ப்புக்காக நீதிபதியைத் திமுகவினர் விமர்சித்து வரும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று மாலை பக்தர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதே சமயம் "திருப்பூரில் டெல்லி போலீசார் வந்து பயங்கரவாதிகளைக் கைது செய்யும் வரை தமிழக போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர்?" என எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் மக்களின் பாதுகாப்பு குறித்து திமுக அரசுக்கு அக்கறையில்லை என அவர் விமர்சித்துள்ளார்.

வாக்கு வங்கி அரசியலுக்காகப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு திமுக அரசு மறைமுக ஆதரவு அளித்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த காலங்களில் கோவையில் நடந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, குண்டுவெடிப்பைச் சிலிண்டர் வெடிப்பு எனச் சித்தரிக்க முயன்றதாகவும் அவர் சாடியுள்ளார்.

மார்ச் 1ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்தக் கூட்டம் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவதற்கான தொடக்கமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான NDA கூட்டணி தமிழகத்தில் மிகவும் வலுவாக உள்ளதாகவும், மக்கள் இரட்டை இன்ஜின் அரசை விரும்புவதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதிப் பங்கீடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், எல்.முருகனின் இந்த அதிரடி அறிக்கை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!