"எம்.ஜி.ஆர் போல விஜய் ஒரு பெரும் தலைவர்... 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும்” - செங்கோட்டையன் உறுதி!
தமிழக அரசியலில் சுமார் 50 ஆண்டுகால அனுபவம் கொண்ட செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
"என்னை பொறுத்தவரையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போலவே விஜய்யும் ஒரு பெரும் தலைவர். அவர்களின் வழியில் விஜய் பயணிப்பது வெற்றியைத் தேடித்தரும்" என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார். மற்ற கட்சிகள் கூட்டணியை நோக்கி ஓடும் நிலையில், தவெக தலைவர் விஜய் தனித்தே நிற்பார் என்றும், அவருக்கான பலமான கூட்டணி பின்னாளில் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
10 கட்சிகள், 8 கட்சிகள் எனப் பெரிய கூட்டணிகளை வைத்துக் கொண்டு இருப்பவர்கள், தேர்தலுக்காகக் கூட்டணிக் கட்சிகளிடம் கெஞ்சி வருவதாக அவர் விமர்சித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் என்றும், "விஜய் கை காட்டுபவரே வெற்றி வேட்பாளர்" என்ற நிலை உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த செங்கோட்டையன், கடந்த நவம்பர் 2025-ல் தவெகவில் இணைந்தது அக்கட்சிக்குப் பெரும் பலமாகக் கருதப்படுகிறது. தற்போது தவெகவின் உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைவராக இருக்கும் அவர், விஜய்க்குப் பின்னால் ஒரு 'கிங் மேக்கராக' இருந்து தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார். இவரது சமீபத்திய பேட்டி, குறிப்பாகக் கொங்கு மண்டல அதிமுக வாக்குகள் மற்றும் விஜய்யின் ரசிகர் பட்டாளத்தை ஒன்றிணைக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!