undefined

டாஸ்மாக்கில் 2 நாட்களில் ரூ.518 கோடிக்கு மது விற்பனை - முதலிடத்தில் எந்த மாவட்டம்?!

 

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று ஜனவரி 16ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், அதற்கு முந்தைய இரு தினங்களில் மது விற்பனை அலைமோதியது.

ஜனவரி 14 போகிப் பண்டிகையன்று ரூ. 217 கோடி, ஜனவரி 15 தைப்பொங்கல் தினத்தில் ரூ.301 கோடி என 2 நாட்களில் மொத்த விற்பனை ரூ. 518 கோடி  வசூலானது.

வழக்கம்போல தலைநகர் சென்னை மண்டலம் விற்பனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்னை - ரூ.98.75, மதுரை - ரூ.95.87, திருச்சி - ரூ.85.13, சேலம் - ரூ.79.59, கோவை - ரூ.76.02 என தமிழகம் முழுவதுமே டாஸ்மாக் விற்பனை அதிகரித்திருந்தது. 

டாஸ்மாக் கடைகள் தவிர்த்து அங்கீகரிக்கப்பட்ட கிளப்புகள் மூலமாகவும் பெரும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மனமகிழ் மன்றங்களில் தனியே இந்த இரு நாட்களில் ரூ.83 கோடி விற்பனையாகி உள்ளது. 

கடந்த 2025-ஆம் ஆண்டு பொங்கல் சமயத்தில் 2 நாட்களில் சுமார் ரூ. 454 கோடிக்கு மது விற்பனையானது. அதனுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சுமார் ரூ.64 கோடி கூடுதல் விற்பனை நடைபெற்றுள்ளது. திருவள்ளுவர் தின விடுமுறை மற்றும் பொங்கலைத் தொடர்ந்து வந்த வார இறுதி விடுமுறைகள் காரணமாக, மதுப்பிரியர்கள் முன்கூட்டியே அதிகளவில் மது பாட்டில்களை வாங்கிச் சேமித்தது இந்த அதிரடி உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!