மதுபோதை தகராறு: நண்பனை அடித்துக் கொன்று எரித்த 3 பேர் கைது!
திருப்பதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், கார் டிரைவரை அடித்துக் கொன்று சடலத்தை எரித்த அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திருப்பதி ரயில்வே குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சீனிவாசுலு என்ற கார் டிரைவர், கடந்த மாதம் 28-ம் தேதி தனது நண்பர்களுடன் மது அருந்தச் சென்றபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வீடு திரும்பாத சீனிவாசுலுவைத் தேடி அவரது குடும்பத்தினர் திருச்சானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். விசாரணையில், மதுக்கடையில் நடந்த மோதலும், அதன் தொடர்ச்சியாக வனப்பகுதியில் நடந்த கொலையும் வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த நண்பர்கள் 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையால் ஏற்பட்ட சிறு தகராறு ஒரு கொலையில் முடிந்தது திருப்பதி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!