"ஒழுக்கம் வேறு.. சட்டம் வேறு"... திருமணமானவர் 'லிவ்-இன்' உறவில் இருப்பது குற்றமல்ல... உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!  

 

 

திருமணமான ஒரு ஆண், மற்றொரு வயது வந்த பெண்ணுடன் 'லிவ்-இன்' (Live-in) உறவில் இருப்பது இந்தியச் சட்டப்படி குற்றமல்ல என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. "சமூகத்தின் ஒழுக்க நெறிகளுக்கும், நாட்டின் சட்டத்திற்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது; குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நீதிமன்றத்தின் கடமையைச் சமூகக் கருத்துக்கள் தடுத்து நிறுத்த முடியாது" என நீதிபதிகள் ஜே.ஜே. முனீர் மற்றும் தருண் சக்சேனா ஆகியோர் அடங்கிய அமர்வு ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த ஒரு ஜோடி தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது இந்தத் தீர்ப்பு வெளியானது. அந்தப் பெண்ணின் தாயார், "தனது மகளை ஏற்கெனவே திருமணமான ஒரு நபர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுவிட்டார்" எனப் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இருவரும் வயது வந்தவர்கள் மற்றும் பரஸ்பர சம்மதத்துடன் இணைந்து வாழ்கிறார்கள். இதில் எவ்வித சட்ட விதிமீறலும் இல்லை" எனக் கூறி, அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தம்பதியினரை மிரட்டவோ, அவர்களது வீட்டிற்குள் நுழையவோ கூடாது எனத் தடை விதித்த நீதிமன்றம், அவர்களின் பாதுகாப்பிற்குச் சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளரே (SP) தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. "சமூகக் கண்ணோட்டத்தில் இது தவறாகத் தெரிந்தாலும், சட்டத்தின் பார்வையில் இது ஒரு குற்றச் செயல் அல்ல" என நீதிமன்றம் விளக்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு தற்போது சட்ட வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் 100 டிகிரி அனலில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!