undefined

அய்யா வைகுண்டசாமி அவதார விழா… தென்காசிக்கு மார்ச் 4 உள்ளூர் விடுமுறை!

 

தமிழ்நாடில்  கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் நடைபெறும் ஐயா வைகுண்டர் அவர்களின் 194வது அவதார திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 04.03.2026 புதன்கிழமை இந்த விடுமுறை அமலில் இருக்கும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவிழாவில் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்றைய தினம் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்படும். அவசர சேவைகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!