25ம் தேதி நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்… உற்பத்தி பொருட்கள் முடங்கும் அபாயம்!
தகுதிச்சான்றிதழ் கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தியதை கண்டித்து, தமிழகத்தில் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் அருகே நடைபெற்ற மாநில லாரி உரிமையாளர்கள் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. மாநில தலைவர் தனராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். வருகிற 25ம் தேதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை தகுதிச்சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தியதாக கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு லாரி உரிமையாளர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய வேலைநிறுத்தம் தொடங்கினால் மாநிலத்தில் சுமார் 6.50 லட்சம் லாரிகள் இயக்கப்படாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதனால் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சரக்கு கொண்டு செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு லாரியை நம்பி பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன என்றும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முறை ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகளையும் நிறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!