லாட்டரியில் ரூ.1 கோடி வென்றவர் கடத்தல்... பரிசுச் சீட்டைப் பறித்த கும்பல் - கேரளாவில் பரபரப்பு!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரவூர் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் (46). கடந்த மாதம் 30-ஆம் தேதி கேரளா மாநில அரசின் லாட்டரி குலுக்கலில் இவருக்கு முதல் பரிசான ரூ.1 கோடி விழுந்தது. ஆனால், இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
லாட்டரித் தொகை கைக்கு வரத் தாமதமாகும் என்பதாலும், வரிப் பிடித்தம் போகக் குறைவான தொகையே கிடைக்கும் என்பதாலும், சாதிக் தனது டிக்கெட்டை வேறொருவருக்கு அதிகத் தொகைக்கு விற்க முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த ஒரு கும்பல், டிக்கெட்டை வாங்குவதாகக் கூறி சாதிக்கை பரவூர் நகருக்கு வரவழைத்துள்ளது. தனது நண்பருடன் அங்கு சென்ற சாதிக்கை, மர்ம கும்பல் ஒன்று வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றது.
சிறிது தூரம் சென்றதும் சாதிக்கின் நண்பரை மட்டும் கீழே இறக்கிவிட்ட கும்பல், சாதிக்கை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி அவரிடமிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டைப் பறித்துக் கொண்டது. பின்னர் இரவு 11:30 மணியளவில் அவரை விடுவித்தனர்.
பாதிக்கப்பட்ட சாதிக் அளித்த புகாரின் பேரில் கண்ணூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய ஒருவரைப் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். மற்ற கூட்டாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!