undefined

காதல் மோசடியா.. பெண் எஸ்.ஐ. மர்ம மரணம்... உதவி ஆய்வாளர் ரஞ்சித் சஸ்பெண்ட்!

 

சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த அந்தோணி மாதா (31) என்பவர், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மற்றொரு சகப் பணியாளருடன் ஏற்பட்டக் காதல் முறிவினால் ஏற்பட்ட மன வருத்தத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தற்கொலை தொடர்பாகக் குடும்பத்தினர் அளித்தப் புகாரின் அடிப்படையில், மீஞ்சூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ரஞ்சித் என்பவர் அதிரடியாகச் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி மாதாவுக்கு 2015ம் ஆண்டு யோவான் என்பவருடன் திருமணமாகி 10 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கணவரைப் பிரிந்து, தனது இரண்டு மகன்களுடன் அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்தார். 2021ம் ஆண்டு அவர் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிக்குச் சேர்ந்த போது, அவருடன் பணியில் சேர்ந்த மற்றொரு ஆண் சப்-இன்ஸ்பெக்டரான ரஞ்சித்துடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நெருங்கிப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

சமீப காலமாக ரஞ்சித், அந்தோணி மாதாவிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டதால், அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு, அந்தோணி மாதா, ரஞ்சித்துக்கு வீடியோ காலில் அழைத்துப் பேசினார். அப்போது உடனடியாகத் தன்னைப் பார்க்க வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுத்த போது, "என்னை பார்க்க வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்" என்று மிரட்டியுள்ளார். அடிக்கடி இதுபோல மிரட்டி வந்ததால், ரஞ்சித் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் செல்போன் இணைப்பைத் துண்டித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

சிறிது நேரம் கழித்துப் பல முறை ரஞ்சித் போன் செய்தும் அவர் எடுக்காததால் சந்தேகம் அடைந்து, ரஞ்சித் அம்பத்தூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றுப் பார்த்தபோது, அந்தோணி மாதா தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தாய் தற்கொலை செய்து கொண்டதால், ஏற்கனவேத் தந்தையைப் பிரிந்து வாழ்ந்து வந்த அந்தோணி மாதாவின் இரண்டு மகன்களும் தற்போதுத் தவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட அந்தோணி மாதாவின் குடும்பத்தினர் அளித்தத் தகவலின் அடிப்படையில், அவருடன் தொடர்பில் இருந்த மீஞ்சூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரஞ்சித் என்பவர் தற்காலிகப் பணி நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். இந்தத் தற்கொலை வழக்கில் போலீசார் தொடர்ந்து ஆழமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!