undefined

அதிமுக ஆட்சியில் காதலர்கள் இலவசமாகப் பேருந்தில் பயணிக்கலாம் - ராஜேந்திரபாலாஜி!

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்கள் மற்றும் காதலர்களுக்குப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படும் என அதிரடியாகப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

சிவகாசி: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானால் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து ராஜேந்திரபாலாஜி விவரித்தார்.

"திமுக அரசு மகளிருக்கு மட்டும் இலவசப் பேருந்து பயணத்தை அறிவித்து குடும்பங்களைப் பிரித்துவிட்டது. ஆனால், எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஆண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம் வழங்கப்படும். இதன் மூலம் ஆண்கள் தங்கள் மனைவி மற்றும் காதலியுடன் இலவசமாகப் பேருந்தில் ஊர் சுற்றலாம், சினிமாவுக்குச் செல்லலாம்," எனத் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் எவ்வித பாகுபாடும் இன்றி மாதம் ரூ. 2,000 அவர்களின் வங்கித் தொகையில் செலுத்தப்படும் என்றார். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் என்றும், மே 5-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்பார் என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.

வரும் ஜனவரி 23-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பிரம்மாண்டக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரே மேடையில் தோன்றுவார்கள் எனத் தெரிவித்தார். டெல்லியில் மோடி ஆட்சி, தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி இருப்பதே தமிழகத்திற்கு நல்லது. பாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சுமூகமாக முடிந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்துள்ள நிலையில், அதிமுக கூட்டணிக்குள் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை இணைப்பது குறித்துத் தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதையும் அவரது பேச்சு உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!