மறுபடியும் மொதல்...ல இருந்தா... அடுத்த 24 மணி நேரத்தில் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...!

 

தமிழகத்தில் டிசம்பர் மாதத் தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் வடமாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. சில நாட்களில் 150 வருடங்களில் இல்லாத அளவு அதிகனமழையால்  தென் மாவட்டங்கள் தத்தளித்தன. தற்போது தான் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில்   அடுத்த 24 மணி நேரத்தில்  அரபிக் கடலில்  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என   சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கும்.   கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக   இன்றும் நாளையும் தமிழகத்தின் குறிப்பிட்ட இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!