undefined

 நவம்பர் 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ... டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! 

 

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு, அடுத்த இரண்டு நாள்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் நிலை உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் இந்த மாற்றம் மேற்கு–வடமேற்கு நோக்கி நகரும் போது அதின் வலிமை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 22ஆம் தேதி உருவாகும் தாழ்வுப்பகுதி, 24ஆம் தேதியில் தாழ்வு மண்டல நிலைக்கு சென்று வலுப்பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் கடலோரப் பகுதிகளில் வானிலை மாற்றம் கூடியுள்ளதாகவும், மழைத் தீவிரம் உயரக்கூடிய சூழல் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களிலும் கடலோர பகுதிகளிலும் நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காவேரிப்படுகை மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வானிலை துறை அறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!