undefined

பிப்ரவரி 15ம் தேதி  புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 

 

 

பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் பிப்ரவரி 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வானிலை மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளது. கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி காரணமாக 12ம் தேதி தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம். 13ஆம் தேதி தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளது. 14ம் தேதியும் தென் தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நீடிக்கும்.

மேலும் 13 முதல் 17ம் தேதி வரை பல மாவட்டங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் பனி தாக்கம் இருக்கும். 17ஆம் தேதி சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான பனிமூட்டம் நிலவக்கூடும். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!