undefined

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது !  

 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இதற்குக் காரணம் என கூறப்பட்டுள்ளது.

இந்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. நகரும் போது அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது. கடல்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வலுவடைந்த பின் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வானிலை அறிவிப்புகளை கவனிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!