ட்ரம்ப்புக்கு நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ!
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, கடந்த ஆண்டு தான் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசின் பதக்கத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு வழங்கினார். வெனிசுலாவில் ஜனநாயகம் மலர போராடியதற்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அந்த பரிசை ட்ரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக அவர் முன்பே கூறியிருந்தார்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை சந்தித்த மச்சாடோ, தனது நோபல் பதக்கத்தை நேரில் வழங்கினார். அமெரிக்காவின் ஆதரவு வெனிசுலாவின் சுதந்திரத்திற்கு முக்கியம் என அவர் தெரிவித்தார். வெள்ளை மாளிகை வெளியே அவரது ஆதரவாளர்கள் திரண்டது கவனம் பெற்றது.
இதற்கு ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். ஆனால் நோபல் பரிசை மற்றவருக்கு மாற்ற முடியாது என நோபல் குழு விளக்கம் அளித்துள்ளது. அதே நேரத்தில் நோபல் பரிசு பெற தகுதியானவர் தானே என ட்ரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்தார். வெனிசுலா அரசியல் சூழலில் இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!