"உடலை வைத்து அரசியல் செய்யாதீங்க!"... ஆகாஷ் மரண வழக்கில் கடுப்பு காட்டிய உயர்நீதிமன்றம் !
மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண விவகாரத்தில், போலீஸார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மனுதாரரைச் சரமாரியாகக் கேள்வி கேட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். "உடலை வைத்துப் போராட்டம் நடத்துவது இப்போது ஒரு 'ஃபேஷன்' ஆகிவிட்டது" என நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "விசாரணை ஏற்கனவே சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுவிட்டது, 7 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்ட பிறகும் குடும்பத்தினர் உடலைப் பெற மறுக்கின்றனர்" என வாதிட்டனர். இதைக் கேட்டு ஆவேசமடைந்த நீதிபதிகள், "உடலைப் பெறாமல் தடுத்தது யார்? அதற்கு நீங்கள் தானே பொறுப்பு? நீதிமன்றத்தைத் தனிப்பட்ட விருப்பத்திற்காகப் பயன்படுத்தாதீர்கள். உடல் அழுகிவிட வேண்டும் என விரும்புகிறீர்களா?" என மனுதாரர் தரப்பை விளாசினர்.
"உடலுக்கு இறுதி மரியாதை செய்வது அடிப்படை உரிமை. அதை விடுத்து உடலை வைத்து அரசியல் செய்வதை ஏற்க முடியாது" என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த மனு வெறும் விளம்பரத்திற்காகத் தாக்கல் செய்யப்பட்டது எனக் கூறி, அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் இந்தச் சாட்டைடி உத்தரவு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!