மதுரை எல்ஐசி தீவிபத்து திட்டமிட்ட படுகொலை... மேலாளர் பெட்ரோல் ஊற்றிப் படுகொலை! - உதவி மேலாளர் வெறித்தனம்!
கடந்த மாதம் 17ம் தேதி இரவு நடந்த இந்தச் சம்பவத்தில், மின் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதாகவே முதலில் கருதப்பட்டது. ஆனால், தடய அறிவியல் சோதனைகளும் போலீஸ் புலனாய்வும் இந்த வழக்கில் திடுக்கிடும் உண்மைகளைக் கொண்டு வந்துள்ளன.
எல்.ஐ.சி. முகவர்கள் சிலர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய 'டெத் கிளைம்' தொகையை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக முதுநிலை மேலாளர் கல்யாணியிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார்களை ஆய்வு செய்த கல்யாணி, உதவி மேலாளராகப் பணியாற்றிய ராம் என்பவரின் மெத்தனப் போக்கே இதற்குக் காரணம் எனக் கண்டறிந்துள்ளார். இது குறித்து மேலதிகாரிகளுக்குப் புகார் அளிக்கப் போவதாக ராமிடம் கல்யாணி எச்சரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராம், கடந்த மாதம் 17ம் தேதி இரவு அலுவலகத்தில் கல்யாணி தனியாக இருந்தபோது, அவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார். கல்யாணி உடல் கருகி உயிரிழந்த நிலையில், தானும் காயமடைந்தது போல நடித்து மருத்துவமனையில் சேர்ந்து நாடகமாடியுள்ளார்.
முதலில் மின் கசிவு எனத் தகவல் பரவினாலும், தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்ததில் பெட்ரோல் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில் உதவி மேலாளர் ராமிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் உரையாடல்கள் ராமுக்கு எதிராக வலுவான ஆதாரங்களாக மாறியுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!