மதுரை மீனாட்சி கோவிலில் பிடிஆர் தாயார் உட்பட பழைய அறங்காவலர்களே நியமனம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் பதவிக்கு திமுகவினர் பலர் முயற்சி செய்த நிலையில், தமிழக அரசு பழைய உறுப்பினர்களையே மீண்டும் நியமித்துள்ளது. உலகப் புகழ் பெற்ற இந்த கோயிலின் தக்காராக 18 ஆண்டுகள் பணியாற்றிய கருமுத்து தி.கண்ணன் மறைவுக்குப் பிறகு, தற்காலிகமாக இந்துசமய அறநிலையத் துறை அதிகாரி நியமிக்கப்பட்டார்.
2023 நவம்பர் மாதம் 5 பேர் கொண்ட அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது. இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜன் உள்ளிட்டோர் இடம் பெற்றனர். அவர்கள் டிசம்பர் மாதம் பதவியேற்றனர். அதன் பின்னர் ருக்மணி பழனிவேல்ராஜன் அறங்காவலர் குழுத் தலைவராக பொறுப்பேற்றார்.
தற்போது கோயிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அறங்காவலர்கள் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து புதிய நியமனம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசு, ஏற்கெனவே இருந்த அறங்காவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் மீண்டும் ருக்மணி பழனிவேல்ராஜன் தலைவராக தேர்வாக உள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!