undefined

மகர ஜோதி தரிசனம் … 35000 பக்தர்களுக்கு மட்டுமே  அனுமதி!

 

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை யாத்திரைக்காக கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மகர ஜோதி நடைபெறும் நாளில் 35 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

விருச்சிக மாதம் 17-ம் தேதி தொடங்கிய மண்டல பூஜை யாத்திரை கடந்த டிசம்பர் 27-ம் தேதி நிறைவடைந்தது. அந்த நாளில் இரவு ‘ஹரிவராசனம்’ பாடலுடன் கோயில் நடை அடைக்கப்பட்டது. மண்டல பூஜை காலத்தில் 36 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ததுடன், ரூ.332 கோடிக்கு மேல் காணிக்கை செலுத்தப்பட்டது.

மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை செவ்வாய்க்கிழமை மாலை திறக்கப்பட்டது. இன்று அதிகாலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மகர ஜோதி ஜனவரி 14-ம் தேதி நடைபெற உள்ளது. வழக்கமாக 70 ஆயிரம் பேர் வரை அனுமதி வழங்கப்பட்டாலும், அந்த நாளில் 35 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜைக்குப் பிறகு ஜனவரி 19-ம் தேதி வரை தரிசனம் நடைபெறும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!