undefined

 மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்… பாஜக-சிவசேனை கூட்டணி முன்னிலை!

 
 

மகாராஷ்டிராவில் மாவட்ட ஊராட்சி மற்றும் பஞ்சாயத்துச் சமிதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. தொடக்க நிலவரங்களின்படி பாஜக மற்றும் அதன் கூட்டணியான சிவசேனை முன்னிலையில் உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் மாநில அரசியல் சூழ்நிலையை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகளை அரசியல் கட்சிகள் ஆவலுடன் கவனித்து வருகின்றன.

மாநிலத்தில் 12 மாவட்ட ஊராட்சிகளுக்கும், 125 பஞ்சாயத்துச் சமிதிகளுக்கும் பிப்ரவரி 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். இன்று காலை 10 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆரம்ப தகவல்களில் பல இடங்களில் கடும் போட்டி நிலவி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி பாஜக 26 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 13 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. தேசியவாத காங்கிரஸ் 13 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. மொத்தமாக ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தல், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எதிர்கால அரசியல் திசையை நிர்ணயிக்கும் என கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!