மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத் அதிரடி நீக்கம்! கட்சி மேலிடம் போட்ட 'திடீர்' உத்தரவு:  

 

 

தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல்களும், அதிரடி மாற்றங்களும் தொடர்கதையாகி வரும் நிலையில், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஹசீனா சையத் தற்போது அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவி அல்கா லம்பா இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹசீனா சையத், சுமார் இரண்டு ஆண்டுகள் இந்தப் பொறுப்பில் நீடித்த நிலையில், தற்போது பதவியிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.

தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் பங்கேற்று, தனது அனல் பறக்கும் வாதங்களால் மக்களிடையே அறியப்பட்ட ஹசீனா சையத், மகிளா காங்கிரஸின் தேசிய செயலாளராகவும் பணியாற்றியவர். தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், வேட்பாளர் தேர்விலும், தொகுதிப் பங்கீட்டிலும் மகிளா காங்கிரஸிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் கூறி சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனில் இவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில், 'கட்சி விரோத நடவடிக்கைகளில்' ஈடுபட்டதாகக் கூறி அவர் மீது இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) உள்கட்சி அரசியலில் இந்தப் பதவி நீக்கம் ஒரு பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியைப் பலப்படுத்த வேண்டிய நேரத்தில், ஒரு முக்கியப் பெண் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கியிருப்பது மகளிர் அணியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என அவரது ஆதரவாளர்கள் கொதிக்கும் நிலையில், அடுத்த தலைவராக யார் வருவார்? என்கிற எதிர்பார்ப்பு இப்போதே தொற்றிக்கொண்டுள்ளது. இதனால் சத்தியமூர்த்தி பவன் அரசியல் களம் தற்போது தகிக்கத் தொடங்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்