undefined

தமிழகத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு... அந்தியோதயா ரயில் வந்தபோது மூடப்படாத ரயில்வே கேட் - விசாரணைக்கு உத்தரவு!

 

நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்குச் சென்றுகொண்டிருந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது, நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே திசையன்விளை ரோட்டில் உள்ள ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்தது. இதனைக் கண்ட ரயில் ஓட்டுநர் உரிய நேரத்தில் ரயிலை நிறுத்தியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்தை நோக்கிப் புறப்பட்ட அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று மாலை சுமார் 4.57 மணி அளவில் நாங்குநேரி ரயில் நிலையத்தைக் கடந்து நெல்லையை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆனால் திசையன்விளை ரோட்டில் அமைந்துள்ள ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததால் ரயில் தொடர்ந்து செல்வதற்கான சிக்னல் கிடைக்கவில்லை.

ரயில் வந்து கொண்டிருந்த போதும், ரயில்வே கேட்டைப் பொருட்படுத்தாமல் வாகனங்கள் அடுத்தடுத்து கடந்து சென்று கொண்டிருந்ததைக் கண்ட ரயில் என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாகச் செயல்பட்டு, அந்த கேட் அருகே ரயிலை உடனடியாக நிறுத்தினார். இதையடுத்து ரயில் ஓட்டுநர் கேட் கீப்பரின் அறைக்குச் சென்று விசாரித்த போது, அவருக்கு முறையான தகவல் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டதாகத் தெரிகிறது. பின்னர் கேட் கீப்பர் விரைந்து செயல்பட்டு அந்தக் கேட்டை மூடினார். அதன் பின்னரே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. பாதுகாப்பில் அலட்சியம் காட்டிய இந்தச் சம்பவம் குறித்துத் திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!