undefined

மகரவிளக்கு தரிசனம்... இன்று சபரிமலையில் மீண்டும் நடை திறப்பு!

 

இன்று மாலை, சபரிமலையில் மகரவிளக்கு பூஜைகளுக்காக மீண்டும் கோயில் நடை திறக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜைகள் நிறைவடைந்த நிலையில், ‘ஹரிவராசனம்’ பாடலுடன் அன்றைய இரவு கோயில் நடை அடைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை 5  மணிக்கு மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை மீண்டும் திறக்கப்படும். தந்திரி மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி இ.டி.பிரசாத் கருவறையைத் திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து அணையாத விளக்கு ஏற்றப்பட்டு, பக்தர்கள் பதினெட்டாம் படியேறி சுவாமி ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

வரும் ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதற்காக சபரிமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் துப்புரவு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!