முன்பதிவு செய்துக்கோங்க... சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல வார இறுதியில் 1010 சிறப்பு பேருந்துகள்!
ஒவ்வொரு வாரமும் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. அந்த வகையில் நாளை ஜூலை 4 மற்றும் 5 தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் ஜூலை 4 , 5 மற்றும் 6ம் தேதி விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருத்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருத்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை 8327 பயணிகளும் சனிக்கிழமை 5052 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8148 பயணிகளும் பயணம் மேற்கொள்ள இதுவரை முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். இதனையடுத்து தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!