நான் எப்போதும் தளபதி ரசிகை தான் .... மாளவிகா நெகிழ்ச்சி பதிவு!
நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழாவுக்கு செல்ல முடியாவிட்டாலும், தனது வாழ்த்துகளை நடிகை மாளவிகா மோகனன் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்யுடன் நடித்த மாளவிகா, அந்த ஜோடி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. விஜய்யின் கடைசி படமாக ‘ஜன நாயகன்’ இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
“விஜய் சாருடன் வேலை பார்த்தது என் வாழ்க்கையில் ஒரு பெருமை. அவரை என் நண்பர் என சொல்லிக் கொள்வது அதைவிட பெரிய கௌரவம். எல்லா வகையிலும் அவர் சிறந்த மனிதர். பல லட்சம் ரசிகர்களைப் போல நானும் அவருக்கும் படக்குழுவிற்கும் மகிழ்ச்சி அடைகிறேன். இப்போதும், எப்போதும் தளபதியின் ரசிகைதான்!” என்று மாளவிகா பதிவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!