undefined

வாசனை, சுவை உணர்வு  தெரியல...  மம்மூட்டி தன் உடல்நலப் பிரச்சினை குறித்து முதல் முறை உருக்கம்!  

 

 

சுமார் ஓராண்டு கால சிகிச்சைக்கு பிறகு நடிகர் மம்மூட்டி மீண்டும் நடிப்பில் ஈடுபட்டு வருகிறார். 2025-ஆம் ஆண்டு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் சினிமாவிலிருந்து சில காலம் விலகி இருந்தார். அவர் புற்றுநோய் சிகிச்சையில் இருந்ததாக செய்திகள் வெளியானாலும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மருத்துவமனை நிகழ்ச்சியில் பேசிய மம்மூட்டி, அந்த காலத்தில் தற்காலிகமாக வாசனை மற்றும் சுவை அறியும் திறனை இழந்ததாக தெரிவித்தார். நீண்ட நாட்கள் எதையும் முகர முடியாமல் இருந்ததாகவும், உணவின் சுவையும் தெரியாமல் இருந்ததாகவும் கூறினார். இதனால் தன்னை மனதளவில் பாதித்த அனுபவமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது அந்த திறன்கள் மெதுவாக திரும்பி வருவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஒரு விஷயத்தை நாம் இழந்த பிறகே அதன் மதிப்பு புரியும் என்று கூறிய அவர், உடல்நலத்தை கவனிப்பது மிகவும் முக்கியம் என ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!