undefined

பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்கொலை...! 

 

கேரளாவில் பேருந்தில் பயணித்த போது இளம்பெண் ஷிம்ஜிதா முஸ்தபா, ஒரு ஆண் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறி வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் அந்த நபரை “க்ரீப்” என அழைத்து பாலியல் சீண்டல் செய்ததாக குற்றம் சாட்டினார். இந்த வீடியோ வேகமாக வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடியோவில் குற்றஞ்சாட்டப்பட்டவர் 42 வயதான தீபக் என்பவர். டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், வீடியோ பரவிய பின் கடும் அவதூறு கருத்துகள் மற்றும் மனரீதியான தாக்குதல்களுக்கு உள்ளானார். சமூக வலைதள அழுத்தம் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தீபக், இறுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தீபக்கின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இளம்பெண் வெளியிட்ட வீடியோவே தற்கொலைக்கு காரணம் எனக் கூறி, கேரள டிஜிபியிடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாகவும், இதற்கு கடும் சட்ட நடவடிக்கை தேவை என்றும் பலர் வலியுறுத்தி வருகின்றனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!