மேடையில் நடிகையிடம் அத்துமீறிய இளைஞர் கைது!
சிங்கப்பூரில் நடைபெற்ற திரைப்பட விளம்பர நிகழ்ச்சியின் மேடையில், பிரபல நடிகையும் பாடகியுமான அரினா கிராண்டேவிடம் (Ariana Grande) கூட்டத்தில் இருந்து வந்த ஒரு வாலிபர் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாகக் கைது செய்யப்பட்ட அந்த வாலிபர், நீதிமன்ற உத்தரவின் பேரில் நாடு கடத்தப்பட்டு, சிங்கப்பூருக்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பிரபலமான பாடகியும், தற்போது 'விக்டு: பார் குட்' (Wicked: Part Good) என்ற திரைப்படத்தின் கதாநாயகியாகவும் நடித்துள்ளவர் அரியானா கிராண்டே. இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சி சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்றது. அரியானா கிராண்டே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தார்.
நிகழ்ச்சி நடந்த மேடையின் அருகே ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரெனப் பாதுகாப்புக் தடுப்பைத் தாண்டிக் குதித்து, மேடைக்கு அருகில் சென்று அரியானா கிராண்டேவிடம் அத்துமீறலில் ஈடுபட்டார்.
இந்த எதிர்பாராத அத்துமீறலால் நடிகை அரியானா கிராண்டே அதிர்ச்சியடைந்தார். உடனடியாகச் சுதாரித்துக்கொண்ட அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து, அத்துமீறலில் ஈடுபட்ட அந்த வாலிபரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். விசாரணையில், அத்துமீறிய அந்த வாலிபர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜான்சன் வென் (26) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பொது இடத்தில் ஒரு நடிகை மற்றும் பெண்ணிடம் அத்துமீறிய செயலில் ஈடுபட்ட ஜான்சன் வென்னுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது.
நீதிமன்றம் அளித்த உத்தரவில், அந்த வாலிபரை ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தியதுடன், எதிர்காலத்தில் அவர் சிங்கப்பூருக்குள் நுழைய வாழ்நாள் தடை விதித்தும் உத்தரவிட்டது.
பொது நிகழ்ச்சிகளில் பிரபலங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதன் அவசியத்தையும், இதுபோன்ற அத்துமீறல்களைச் சட்டம் கடுமையாக அணுகும் என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!