undefined

 தங்கைக்கு  பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை வெட்டிக்கொலை செய்த  அக்கா!  

 
 

கடலூர் பாதிரிக்குப்பம் குறிஞ்சி நகரை சேர்ந்த பிரசாத் (40) தாயார் ராமதிலகத்துடன் சுந்தரமூர்த்தி நகரில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தார். நேற்று மாலை பிரசாத் கழுத்து அறுக்கப்பட்ட ரத்தக்காயங்களுடன் வீட்டுக்குள் ஓடிவந்து தாயாரிடம் துண்டு கேட்டுள்ளார். அவர் கொடுத்ததும் கழுத்தில் சுற்றிய சில நொடிகளில் மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த ராமதிலகம் அலறியபடி உதவி கேட்க, அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது பிரசாத் உயிரிழந்தது தெரிய வந்தது.

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, பிரசாதின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையில், பக்கத்து வீட்டை சேர்ந்த கவிப்பிரியா (30) திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் நேரடியாக சென்று சரணடைந்தார். ஆரம்ப விசாரணையில், பிரசாத் தனது தங்கைக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதை கேட்ட கவிப்பிரியா ஆத்திரம் அடைந்ததாகவும் தெரியவந்தது.

இதனால் கவிப்பிரியா தனது கணவர் முத்துவுடன் சேர்ந்து பிரசாதை கத்தியால் கழுத்தில் வெட்டி கொன்றது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது கவிப்பிரியா கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள கணவர் முத்துவை போலீசார் தேடி வருகின்றனர். தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை அக்கா-மருமகன் இணைந்து வெட்டிக்கொன்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!