undefined

3வது கணவருடன் சேர்ந்து 2 வயது மகளைக் கொன்று புதரில் வீசிய கொடூரம்!

 

மதுரை மாவட்டம் சொரிக்காம்பட்டியில், மூன்றாவது கணவருடன் சேர்ந்து 2 வயது மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, சடலத்தைப் புதரில் வீசிய கொடூரத் தாய் மற்றும் அவரது கணவர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு மாதத்திற்குப் பிறகு இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மதுரையில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் தென்காசியைச் சேர்ந்த கண்ணன் (25) மற்றும் கேரளாவைச் சேர்ந்த கலாசூர்யா (25) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முடிந்து கணவர்களைப் பிரிந்து வாழ்ந்த கலாசூர்யாவுக்கு, இரண்டாவது கணவர் மூலம் சிவானி (2 வயது) என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், கலாசூர்யாவுக்கும் கண்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

குழந்தை சிவானி தனக்குத் தொந்தரவாக இருப்பதாகக் கண்ணன் அடிக்கடி கலாசூர்யாவிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 5-ஆம் தேதி கலாசூர்யா கடைக்குச் சென்றிருந்தபோது, கண்ணன் 2 வயதுச் சிவானியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அது பற்றி அறிந்த கலாசூர்யா அதிர்ச்சி அடைந்தாலும், இருவரும் சேர்ந்து குழந்தையின் உடலை ஒரு மூட்டையில் கட்டி அருகில் உள்ள காட்டுப் பகுதிப் புதரில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், கலாசூர்யா கேரளாவில் உள்ள தனது தாயின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு, குழந்தை எங்கே என்று தாய் சந்தியா கேட்டபோது, கலாசூர்யா சரிவரப் பதிலளிக்காததால் சந்தேகம் அடைந்த சந்தியா, புனலூர் போலீசில் புகார் அளித்தார். கேரள போலீசார் விசாரணையைத் தொடங்கிய நிலையில், கண்ணன் நேற்று (வெள்ளிக்கிழமை) கரடிக்கல் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சரண் அடைந்தார்.

போலீசார் அவரிடமும், கலாசூர்யாவிடமும் நடத்திய விசாரணையில் குழந்தையைக் கொன்ற உண்மையை ஒப்புக்கொண்டனர். சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில், போலீசார் காட்டுப் பகுதிக்குச் சென்று தேடியபோது, குழந்தையின் எலும்புகளை மட்டுமே மீட்க முடிந்தது. அவற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்த போலீசார், கண்ணன் மற்றும் கலாசூர்யாவைத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!