undefined

நடுரோட்டில் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்... பெரும் பரபரப்பு!

 

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் வாசலில், பொதுமக்கள் திரண்டிருந்த வேளையில் ஒரு நர்ஸை அவரது கணவரே கத்தியால் சரமாரியாக வெட்டி, கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூரச் சம்பவம் விஜயவாடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகமே இந்தக் கொலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

விஜயவாடா மாவட்டம் துர்கா அக்ராஹாரத்தைச் சேர்ந்த விஜய் (40) தனியார் மருத்துவமனையில் தொழில்நுட்ப வல்லுனராகப் பணியாற்றி வந்தார். அதேபோல, நுஜிவீடுவில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்த சரஸ்வதி (30) என்பவரை விஜய் காதலித்து 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு, விஜய் தனது மனைவி சரஸ்வதியின் நடத்தை மீது சந்தேகம் கொள்ளத் தொடங்கினார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த ஒன்றரை வருடங்களாகக் கணவரைப் பிரிந்து சரஸ்வதி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

மனைவி வேலைக்குச் சென்று வீடு திரும்புவதைக் கடந்த சில நாட்களாக விஜய் கண்காணித்து வந்துள்ளார். நேற்று காலை 8 மணிக்கு வேலைக்குச் சென்ற சரஸ்வதி, மதியம் 2 மணிக்கு வேலை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். ஆஸ்பத்திரிக்கு வெளியே கத்தியுடன் மறைந்திருந்த விஜய், ஆவேசத்துடன் சென்று சரஸ்வதியைச் சரமாரியாகத் தாக்கி கீழே தள்ளினார்.

தரையில் விழுந்த சரஸ்வதியின் கழுத்தில் அவர் வைத்திருந்த கத்தியால் வெட்டினார். அலறல் சத்தம் கேட்டதும் பொதுமக்கள் திரண்டு வந்து சரஸ்வதியைக் காப்பாற்ற முயன்றனர். அப்போது, விஜய் தனது மனைவியின் கழுத்தை மேலும் ஆழமாக அறுத்துள்ளார். ரத்தம் பீறிட்டு கொட்டிய நிலையில், தடுக்க முயன்ற பொதுமக்களை ரத்தம் சொட்டச் சொட்ட இருந்த கத்தியைக் காட்டி "உங்களையும் கொலை செய்து விடுவேன்" என மிரட்டினார். இதனால் உயிர் பயத்தில் யாரும் விஜய்யை நெருங்கவில்லை. சிறிது நேரத்தில் சரஸ்வதி துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாகச் சூர்ய ராவ் பேட்டை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்கள் உதவியுடன் விஜய்யை மடக்கிப் பிடித்தனர். சரஸ்வதியின் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஜய்யைக் கைது செய்த போலீசார் அவரைச் சிறையில் அடைத்தனர். இந்தக் கொடூரச் சம்பவம் விஜயவாடா நகரையே உலுக்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!