undefined

நண்பனின் மனைவியை பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டல்!

 

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சேலையூர் பகுதியில் நண்பனின் மனைவியை பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் சேலையூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் நண்பரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நண்பர் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், அவரது மனைவியைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இந்தச் செயலைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்த அந்த நபர், "வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன்" என மிரட்டி அந்தப் பெண்ணிடம் ரூ. 5 லட்சம் பணம் கேட்டுள்ளார்.

பணத்தைக் கொடுக்க மறுத்த அந்தப் பெண்ணை அந்த நபர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த அந்தப் பெண், சேலையூர் காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், சம்பந்தப்பட்ட நபர் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரது செல்போனில் இருந்த வீடியோ ஆதாரங்களையும் போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பனின் குடும்பத்தையே சிதைக்க முயன்ற இந்த நபரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!