விவாகரத்து கேட்டதால் ஆத்திரம் - மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்!
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியைச் சேர்ந்த சங்கீதா தேவி என்பவருக்கும் அவரது கணவருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா தேவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த கணவன், சங்கீதா தேவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சங்கீதாவை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சங்கீதா தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலையைச் செய்துவிட்டுத் தலைமறைவான கணவனைப் பிடிக்கக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில் நீதி கேட்டுப் போராடிய ஒரு பெண், கணவனாலேயே சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!