தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்தவர் கால் தவறி கீழே விழுந்த பலி!
கூடுவாஞ்சேரி அடுத்த வள்ளலார் நகரை சேர்ந்த செல்லத்துரை (63) நேற்று மதியம் வீட்டின் பின்புறம் உள்ள தென்னை மரத்தில் இளநீர் பறிக்க சென்றார். இரண்டாவது மாடி மேலிருந்து கம்பின் உதவியுடன் மரத்தில் ஏறினார். இளநீர் பறிக்க முயன்ற போது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவர் அலறி கூச்சலிட்டதை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். உடனடியாக அவரை கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு நேரத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் மருத்துவமனைக்கு சென்று உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!