பாமகவில் அதிரடி ஒழுங்கு நடவடிக்கை… ஜி.கே.மணி கட்சியில் இருந்து நீக்கம்!
பாட்டாளி மக்கள் கட்சியின் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மூத்த நிர்வாகியுமான ஜி.கே.மணி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கட்சி விரோத செயல்பாடுகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கட்சியின் அமைப்பு விதி 30(இ) பிரிவின்படி, கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி ஜி.கே.மணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒரு வார காலக்கெடுவுக்குள் விளக்கம் அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்ட நிலையில், எந்த பதிலும் வரவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து சென்னையில் கூடிய பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு, ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்க பரிந்துரை செய்தது.
அந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணியை கட்சியில் இருந்து முற்றிலும் நீக்கியுள்ளார். மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜி.கே.மணி தரப்பில் இதுவரை விளக்கம் வெளியாகாத நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்த நடவடிக்கை பாமகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!