மணிமுத்தாறு அருவிக்கு இன்று முதல் அனுமதி… சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி!

 

அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு இன்று முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புலிகள் கணக்கெடுப்பு பணிகள் காரணமாக விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் நீக்கப்பட்டுள்ளது.

மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு காலை 10 மணி முதல் பயணிகள் செல்லலாம் என வனத்துறை அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

புலிகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. அனுமதி மீண்டும் வழங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!