முடிவுக்கு வரும் குடியரசு தலைவர் ஆட்சி... மணிப்பூரின் முதல்வராகிறார் யும்நாம் கெம்சந்த்!
மணிப்பூர் பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக யும்நாம் கெம்சந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக அவர் பதவியேற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்து புதிய அரசு அமைக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இந்த மோதல்களில் சுமார் 260 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டனர். இந்த சூழ்நிலையால் கடந்த ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி முதல்வர் பிரேன் சிங் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
புதுதில்லியில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பிரேன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் யும்நாம் கெம்சந்த் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் குகி சமூகத்தை சேர்ந்த முன்னாள் பெண் அமைச்சர் நெம்சா கிப்ஜென் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!