மணிப்பூரில் மீண்டும் பதற்றம்… முழு அடைப்பு போராட்டம்!
மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி சமூகத்தினர் இடையிலான மோதல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வன்முறை நிலவி வந்தது. இந்த மோதலில் சுமார் 260 பேர் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி முதல்வராக இருந்த பாஜகவைச் சேர்ந்த பிரேன் சிங் ராஜிநாமா செய்தார். பின்னர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, அது இரண்டு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது. அந்த ஆட்சி பிப்ரவரி 12-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் யும்நாம் கெம்சந்த் சிங் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு புதிய முதல்வராக பதவியேற்றார்.
இதற்கிடையில் குகி சமூகத்தைச் சேர்ந்த நெம்சா கிப்ஜென் புதிய அரசில் இணைந்ததை எதிர்த்து குகி-ஜோ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. சமூகத்தின் ஒப்புதல் இன்றி அவர் அரசில் இணைந்ததாக குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள் சுராசந்த்பூர் மாவட்டம் துய்மோங் பகுதியில் டயர்களுக்கு தீ வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டன.
மேலும் குகி மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. பந்த் ஆதரவாளர்கள் தடியுடன் வந்து வாகனங்களை மறித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!