மணிப்பூரில் மீண்டும் பதற்றம்…5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம்!
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்ட நிலையில் யும்நாம் கெம்சந்த் சிங் புதிய முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து குகி மற்றும் நாகா சமூகத்தினருக்கு இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரூல் மாவட்டத்தின் லிட்டன் கிராமத்தில் இரு சமூகத்தினரும் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு டங்குல் நாகா சமூகத்தினரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு குகி சமூகத்தினருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே நேரத்தில் குகி சமூகத்தினரின் சில வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிக்கிபங் கிராம மக்கள் லிட்டன் கிராமத் தலைவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாகவும், காவல் நிலையத்திற்கும் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
பதற்றம் அதிகரித்ததால் உக்ரூல் மாவட்டத்தில் ஐந்து நாட்களுக்கு இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். லிட்டன் மற்றும் சிக்கிபங் பகுதிகளில் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!