undefined

மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் மீது பாலியல் வழக்குப் பதிவு !

 

 

2024-ல் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை இயக்கிய மலையாள இயக்குநர் சிதம்பரம் மீது, பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கொச்சி நகர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 2022ஆம் ஆண்டு கொச்சியில் உள்ள ஒரு குடியிருப்பில் இந்தச் சம்பவம் நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின்படி, புகார்தாரரின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

புதிய பாரதிய நியாய சன்ஹிதா அமலுக்கு வருவதற்கு முன்பு சம்பவம் நடந்ததால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். புகார்தாரரின் விரிவான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, அனைத்து விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விசாரணைக்கு ஆஜராகுமாறு இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.

2006ஆம் ஆண்டு குணா குகை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்காக இயக்குநர் மாநில அரசின் சிறந்த இயக்குநர் விருதையும் பெற்றார். முன்னதாக இப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சௌபின் ஷாஹிர் மீது நிதி மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!