மழை நீரைக் குடித்து, ஒரே நாளில் ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ போராட்டத்தை முடித்தார் மன்சூர் அலிகான்!
போலீசார் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதியளிக்காமல், ஒரு நாள் மட்டும் அனுமதி அளித்திருந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு மழை நீரைக் குடித்து தனது சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டார் மன்சூர் அலிகான்.
முன்னதாக இன்று காலை சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே 'சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை' நடிகர் மன்சூர் அலிகான் தொடங்கினார். தான் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசும்போது, தனது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினார்.
"வேலை செய்வதற்காக வட மாநிலம், தென் மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு ஏராளமானோர் வருகிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தமிழகத்தில் வாக்குரிமையை வழங்கக் கூடாது" என்று அவர் வலியுறுத்தியுள்ளார். வேலைக்காக மட்டுமே வந்து குடியேறியவர்களுக்கு இங்கு வாக்குரிமை அளிப்பது, காலப்போக்கில் தமிழகத்தின் உரிமைகளைப் படுகுழியில் தள்ளும் என்று அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் உரிமைகளைப் பாதிக்கும் இந்த நடைமுறையைக் கண்டிக்கும் விதமாகவே தனது போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும், தமிழகத்தின் உரிமைகளைப் படுகுழியில் தள்ளும் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் போலீசார் ஒரு நாள் மட்டுமே அனுமதி அளித்திருந்ததாக கூறி, இன்று மாலை 5 மணிக்கு மழை நீரைக் குடித்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!