undefined

மார்கழி மாதம் ஏன் பீடை மாதம்? என்ன செய்யலாம், செய்யக்கூடாது? 

 
 

 மாதங்களில் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படும் மார்கழி மாதம், ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்களால் பக்தி மணம் கமழும் ஒரு காலமாகும். ஸ்ரீ கிருஷ்ணரே 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்று கூறியதால், இந்த மாதத்திற்குப் புனிதம் அதிகம். ஆனால், பொதுவாக இந்த மாதத்தைப் 'பீடை மாதம்' என்று கூறி எந்தவித நல்ல காரியங்களையும் செய்ய மாட்டார்கள். இதற்கு என்ன காரணம், இந்த மாதத்தில் என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதை அறிவது அவசியம்.

மார்கழி மாதத்தில் அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து நீராடுவது கட்டாயமாகும். அதிகாலை நேரத்தில் இயற்கையிலிருந்து கிடைக்கக்கூடிய ஆக்ஸிஜன் சக்தி, உடலுக்கு அந்த ஆண்டு முழுவதும் தேவையான நன்மையை அளிக்கும் என்பதால் அதிகாலையில் குளிக்க வேண்டும். மேலும், மார்கழி மாதத்தில் அதிகாலைக்குப் பிறகு உறங்கக் கூடாது. அதேபோல், விதை விதைப்பதற்கான காலம் இதுவல்ல என்பதால், இந்த மாதத்தில் விதை விதைக்கக் கூடாது என்று சொல்வார்கள்; சரியான உயிர் தன்மை கிடைக்காமல் போய்விடும் என்பதாலேயே திருமணங்கள் உள்ளிட்ட சுப காரியங்களை மார்கழியில் தவிர்ப்பது வழக்கம். அடுத்து, பெண்கள் இரவில் கோலம் போடக்கூடாது.

இந்த மாதத்தில் செய்ய வேண்டிய முக்கிய விஷயம், முழுமனதோடு இறைவனின் திருநாமங்களை ஜபிப்பதுதான். எந்தவித கேட்ட சிந்தனைகளும் இல்லாமல், 30 நாட்களும் கட்டாயம் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளி எழுச்சி போன்ற பாசுரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும். இயலாதவர்கள் காதால் கேட்டாலே புண்ணியம் கிட்டும். வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆருத்ரா தரிசனம் போன்ற பெருந்திருநாட்கள் வரும் இந்த மார்கழி மாதத்தில், பக்தி மற்றும் பணிவுடன் இறைவனைச் சென்று சேர்வதற்குரிய கடமைகளைச் செய்து பெருமாளின் அருட்கடாட்சத்தைப் பரிபூரணமாகச் சேவிக்க வேண்டும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!