மார்கழி துவங்கிடுச்சு... இன்று முதல் மீனாட்சியம்மன் கோவில் நடைத்திறப்பு நேரத்தில் மாற்றம்!
இன்று மார்கழி மாதம் துவங்கி உள்ள நிலையில், இன்று முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைதிறப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருடம் முழுவதும் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் திருவிழாக்களும், கொண்டாட்டங்களும் தான். நாடு முழுவதும், வெளிநாடுகளிலிருந்து கூட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் புனிதத் தலம் இது. மார்கழி பிறப்பை முன்னிட்டு இந்த மாதத்திற்கான சிறப்பு பூஜைகள் கோவிலில் தொடங்க உள்ளன.
இன்று டிசம்பர் 16ம் தேதி முதல் ஜனவரி 15ம் தேதி வரை திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெறும். அதிகாலையில் திருஞானசம்பந்தர் சன்னதியில் திருஞானபால் வழங்கப்படும். மார்கழியை முன்னிட்டு கோவில் வெளிக்கோபுர கதவுகள் தினமும் காலை 3.30 மணிக்கே திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உச்சிக்கால பூஜைக்கு பிறகு நண்பகல் 12 மணிக்கு நடை மூடப்படும். மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறந்து, இரவு 9 மணிக்கு பல்லாக்கு புறப்பு, பூஜைகள் நடைபெறும். இரவு 9.30 மணிக்குள் அனைத்து பூஜைகளும் முடிந்து கோவில் நடை சாத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!