undefined

மெரினா செல்லத் தடை...  வெள்ளம் போல் தேங்கிய மழைநீர்! 

 
 

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருந்தாலும், அதன் தாக்கம் குறையாமல் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ச்சியாக கனமழை கொட்டுகிறது. இன்று இரவும் மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், இந்த தாழ்வு மண்டலம் சென்னை–மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கு மாவட்டங்களில் கனமழை மேலும் வலுத்து பெய்யக்கூடும் என கூரப்பட்டுள்ளது.

நேற்று முதல் நகரம் முழுவதும் மழை ஓய்வில்லாமல் பெய்ததால் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகள் சேற்றாகி வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்ட நிலையில், பள்ளி–கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. பல இடங்களில் மழைநீர் ஓடைகள் போல் ஓட, மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கனமழையின் தாக்கத்தால் மெரினா கடற்கரை மணல் பகுதி முழுவதும் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. சில பகுதிகள் கடல் கரை நீட்டிப்பாகவே காட்சியளிப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை நோக்கி செல்லும் அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் தடைகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!