பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த தியாகியின் மகளுக்கு அரசுப் பணி !
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2025 ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற கோரமான பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணமடைந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த தியாகி சந்தோஷ் ஜக்தாலேவின் மகள் அசாவரி ஜக்தாலேவுக்கு, புணே மாநகராட்சியில் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 6 பேர் உட்பட மொத்தம் 26 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவியும், ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் உறுதி அளித்திருந்தனர்.
இருப்பினும், அரசுப் பணி தருவதாக உறுதியளித்து பல மாதங்கள் கடந்தும் பணி ஆணை வழங்கப்படவில்லை என அசாவரி ஜக்தாலே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். முதுகலைப் பட்டம் பெற்ற பட்டதாரியான அவர், தனது தந்தையின் தியாகத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், அவரது கோரிக்கையை ஏற்று புணே மாநகராட்சியில் 'நிர்வாக அதிகாரி' என்ற உயரிய பொறுப்பில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதன்கிழமை (மார்ச் 18) நடைபெற்ற நிகழ்வில், புணே மேயர் நேரடியாக அசாவரி ஜக்தாலேவைச் சந்தித்து அவருக்கான பணி நியமனக் கடிதத்தை வழங்கினார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தியாகியின் மகளுக்கு அரசுப் பணி கிடைத்துள்ளது அந்தப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியைத் தமிழகம் போன்றே மகாராஷ்டிர அரசும் நிறைவேற்றியுள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது. தியாகியின் குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட இந்த கௌரவம் மற்ற தியாகிகளின் குடும்பங்களுக்கும் நம்பிக்கையை அளித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!