மருதமலையில் தைப்பூச திருவிழா... வாகனங்கள் செல்லத் தடை !
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 25-ந் தேதி மாலை 5 மணிக்கு விநாயகர் பூஜை மற்றும் வாஸ்து சாந்தி நடைபெறுகிறது. தொடர்ந்து 26-ந் தேதி காலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. இதையடுத்து திருவிழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.
அடுத்த மாதம் பிப்ரவரி 1-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதே நாள் மாலை 3 மணிக்கு திருத்தேர் வீதி உலா நடைபெறும். 2-ந் தேதி மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை தெப்பத்திருவிழா நடக்கிறது. 3-ந் தேதி மாலை 4.30 மணிக்கு கொடி இறக்குதல், 4-ந் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை வசந்த உற்சவம் நடைபெற உள்ளது.
திருவிழாவையொட்டி ஜனவரி 30-ந் தேதி முதல் பிப்ரவரி 2-ந் தேதி வரை மலைக்கோவிலுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவோ அல்லது கோவில் பஸ் மற்றும் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் பஸ்கள் மூலமாகவோ மட்டுமே கோவிலுக்கு செல்ல வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!