undefined

பொது இடங்களில்  முகக்கவசம் நல்லது, கட்டாயமில்லை...  அமைச்சர் மா.சுப்பிரமணியன்!  

 


இந்தியா முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது.  கடந்த 2 நாட்களில் மட்டும் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதனையடுத்து   நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கையில் அதிகபட்சமாக கேரளாவில் 1,147, மஹாராஷ்டிராவில் 424, டெல்லியில் 294, குஜராத்தில் 223 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


குறிப்பாக கேரளா, டெல்லி  மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இதில் தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு  மொத்த எண்ணிக்கை 148ஆக அதிகரித்துள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனால், பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், மீண்டும் பரவும் கொரோனாவால் முகக்கவசம் கட்டாயமா? அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை  குறித்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன், ”தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவால் மக்கள் பதற்றமடைய வேண்டாம். இந்த வகை கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.  அடிக்கடி கைகளை கழுவுதல், தும்மல், இருமலின் போது முகத்தை மூடிக்கொள்வது இவைகளை  கடைப்பிடித்தால் போதுமானது.சமூக இடைவெளி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது  கட்டாயமில்லை எனக் கூறியுள்ளார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது