undefined

 மே 22ம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அதிரடி! 

 
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில்  கீழக்கரை தாலுகா ஏர்வாடி தர்காவில் அமைந்துள்ள அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹீம் ஷாஹித் ஒலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா மே 21ம் தேதி 22ம் தேதி பிற்பகல்  வரை நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 22ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜூன் 14ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது. அதே சமயம் மே 22ம் தேதி ராமநாதபுரம் மாட்டத்தில் உள்ள அனைத்து சார்நிலை கருவூலகங்கள் குறைந்தபட்ச பணியாளர்களோடு இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?