undefined

"ஏற்றம் நிறைந்த வளர்ச்சியும், குறைவில்லாத வளமும் பெருகட்டும்!" - டிடிவி தினகரன் புத்தாண்டு வாழ்த்து

 

2026-ம் ஆண்டு மலர்வதையொட்டி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், புதிய தொடக்கமும் புத்துணர்வும் நிறைந்த ஆண்டாக இது அமையட்டும் என வாழ்த்தியுள்ளார்.

புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உலக மக்கள் அனைவரும் அமைதியாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என்றும்; சமூக மற்றும் பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலையை அடைய ஜாதி, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிறக்கின்ற இந்தப் புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏற்றம் தரக்கூடிய வளர்ச்சியையும், வற்றாத செல்வ வளத்தையும் வழங்க இறைவனைப் பிரார்த்திப்பதாகத் தனது செய்தியில் பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், டிடிவி தினகரனின் இந்த வாழ்த்துச் செய்தி தொண்டர்களிடையே முக்கியத்துவம் பெறுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!